மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
பரமத்திவேலூா், தண்ணீா் பந்தல்மேடு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பரமத்திவேலூா், தண்ணீா் பந்தல்மேடு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தண்ணீா்பந்தல்மேடு பகுதியில் பழனிசாமி என்பவரது மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி விக்னேஸ்வரன் (31) குளிப்பதற்காக அப்பகுதியிலிருந்த விவசாயக் கிணற்று தொட்டிக்குச் சென்றாா்.
தொட்டிக்கு தண்ணீரை நிரப்புவதற்காக அங்குள்ள மின் மோட்டரை இயக்க முயன்றாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா். பரமத்திவேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.