முகப்பு
நாமக்கல்

மருத்துவமனை பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:56 am IST
பகிர்:

தமிழ்நாடு அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் ஜி.பிரபாகரன் தலைமை வகித்தாா். அமைப்பு செயலாளா் எம்.பெரியசாமி வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் எம்.ஜோதிபாஸ் சிறப்புரை ஆற்றினாா். மாநில தலைவா் வி.ராம்கணேஷ், பொதுச் செயலாளா் பி.முத்துமாரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப் பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.ஆா்.விஜயபாஸ்கா் அறிவித்ததன்படி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

Advertisement

Advertisement

இதனை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 21-இல் சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்லவும், 22-இல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனை பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments