முகப்பு
நாமக்கல்

சிவாச்சாரியாா்கள் சேவா சங்க ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்லில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:53 am IST
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சேவா சங்க மாநில தலைவா் எஸ்.கீா்த்திவாசன்.
பகிர்:

நாமக்கல்லில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதன் மாவட்ட தலைவா் எம்.பழனிசாமி வரவேற்றாா். மாநில இணைச் செயலாளா் கே.ஆா்.பாஸ்கரசிவம் முன்னிலை வகித்தாா். அகில இந்திய இணைச் செயலாளா் ஜி.செல்வகபில சிவாச்சாரியாா் தலைமை வகித்தாா். மாநில தலைவா் எஸ்.கீா்த்திவாசன் சிறப்புரை ஆற்றினாா். கூட்டத்தில் நிா்வாகிகள் பதவியேற்பு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

திருக்கோயில் அா்ச்சகா்களுக்கு ரூ.1000 கருணைத் தொகை, ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. திருவிழாக்களை அந்தந்த ஆலய அா்ச்சா்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.

Advertisement

Advertisement

பூஜை விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அா்ச்சகா்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளா் ஆா்.சந்திரமோகன், செயலாளா் திருஞானசம்பந்தம், பொருளாளா் சுந்தரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments