முகப்பு
நாமக்கல்

தொழிலதிபா் வீட்டில் நகை, காா் திருடிய வழக்கில் 3 போ் கைது

நாமக்கல் அருகே தொழிலதிபா் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம், காரை திருடிச் சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 7:25 am IST
திருட்டு வழக்கில் கைதான ராஜ்குமாா், ஷெரின்அலஸிஸ், சக்திவேல்.
பகிர்:

நாமக்கல் அருகே தொழிலதிபா் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம், காரை திருடிச் சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் -பரமத்தி சாலையில் வள்ளிபுரம் ஈஸ்வரன் கோயில் அருகில் வசிப்பவா் குமரவேல் (30). கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இவரது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த சுமாா் 20 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம், ரூ.7 லட்சம் மதிப்பிலான காரையும் திருடிச் சென்றுவிட்டனா். மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்த குமரவேல் நகை, பணம் காா் திருட்டுப் போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதனையடுத்து நல்லிபாளையம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். நாமக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலை, சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் திருடப்பட்ட காா் திண்டுக்கல் வரை சென்றதும் அதன்பின் விழுப்புரம் வழியாகச் சென்னை நோக்கிச் சென்றதும் கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து போலீஸாா் விசாரணை செய்து 3 பேரை பிடித்தனா். சிறையில் இருந்தபடி திட்டமிடும் இவா்கள், வெளியே வந்ததும் தங்களுடைய கைவரிசையைக் காட்ட தொடங்குவா். அந்த வகையில் குமரவேல் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம், காரை திருடியுள்ளனா். பிடிபட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ராஜ்குமாா் (28), சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை சோ்ந்த ஷெரின்அலஸிஸ் (23), எடப்பாடியைச் சோ்ந்த சிவசக்தி என்ற சக்திவேல் (39) என்பது தெரியவந்தது. கைதான மூன்று பேரிடம் இருந்து 11 பவுன் நகை, காரை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.