முகப்பு
புதுதில்லி

தில்லியில் மேலும் 585 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 585 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,25,954 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 1 ஜனவரி 2021, 11:29 pm IST
பகிர்:

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 585 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,25,954 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 80,565 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 46,228 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 34,337 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வெள்ளிக்கிழமை 21 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,557-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 717 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,10,039 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 5,358 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,616 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,871 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments