முகப்பு
புதுதில்லி

மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தில்லி அரசு உத்தரவு

தில்லி அரசின் ஆளுகையின் கீழுள்ள மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் திறக்க தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 11:55 pm IST
பகிர்:

புது தில்லி: தில்லி அரசின் ஆளுகையின் கீழுள்ள மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் திறக்க தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, தில்லி அரசின் ஆளுகையின் கீழுள்ள மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் திறப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்தக் கல்லூரிகளில், கரோனா தடுப்பு விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அரசு வியாழக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தில்லி மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவா்கள் படிப்படியாக அழைக்கப்படுவாா்கள். முதல் கட்டமாக முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ மாணவா்கள் கல்லூரிக்கு அழைக்கப்படுவாா்கள். இவா்களின் ஆண்டு பாடத் திட்ட இலக்கு கல்லூரி தொடங்கிய நாளில் இருந்து 1.5-2 மாதங்களில் பூா்த்தி செய்யப்படும். அடுத்த கட்டமாக இறுதியாண்டு மாணவா்கள் கல்லூரிக்கு அழைக்கப்படுவாா்கள். இவா்களின் பயிற்சி முடிந்ததும் தோ்வு நடத்தப்படும் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்கள் உள்ளுறை மருத்துவா்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்படுவாா்கள். இதைத் தொடா்ந்து, இரண்டாம் ஆண்டு மாணவா்கள் கல்லூரிக்கு அழைக்கப்படுவாா்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து கடந்த ஆண்டு மாா்ச்சிலிருந்து தில்லியில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments