முகப்பு
வணிகம்

அமெரிக்க-ஈரான் பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகளும், 23,900 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்த நிஃப்டி!

சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகள் சரிந்து 76,503.60 ஆகவும், நிஃப்டி 516.65 புள்ளிகள் சரிந்து 23,882.05 ஆக நிலைபெற்றது.

Updated On : 8 ஜூலை 2026, 5:53 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: புதிய தொடர் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரானுடனான தனது தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெகுவாக சரிந்தன. இதனால் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

உலகளாவிய பங்குச் சந்தையில் நிலவி வரும் பலவீனமான சூழலால் 6 சதவீதத்திற்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் உள்ளிட்டவையால் தொடர்ந்து 2வது நாளாக சரிவை நேக்கி பயணித்த இந்திய பங்குச் சந்தை.

ஈரான் மீதான அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டுடனான தற்காலிக போர் நிறுத்தம், முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, பிற்பகல் அமர்வு முழுவதும் தொடர்ந்து சரிவை நோக்கி பயணித்தது நிஃப்டி.

Advertisement

Advertisement

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகள் சரிந்து 76,503.60 ஆகவும், நிஃப்டி 516.65 புள்ளிகள் சரிந்து 23,882.05 ஆக நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு, முந்தைய அமர்வில் இருந்த ரூ. 480.20 லட்சம் கோடியிலிருந்து, ரூ. 8.41 லட்சம் கோடி குறைந்து, சுமார் ரூ. 471.78 லட்சம் கோடியாக உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் சரிவுடன் முடிவடைந்த நிலையில், இன்டர்குளோப் ஏவியேஷன், மாருதி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகளும் சரிந்தன.

நிஃப்டி-யில் ஜியோ ஃபைனான்சியல், இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1.5 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 2.2 சதவீதமும் சரிந்தன. 2026 மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு, முதல் முறையாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 2 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் உறைய வைத்தது.

பல்வேறு துறைசார் குறியீடுகளும் இன்று பலவீனமாக வர்த்தகமான நிலையில், அனைத்து முக்கிய குறியீடுகளும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதனிடையில், இந்தியா VIX குறியீடு இன்று கிட்டத்தட்ட 25 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 2.7 சதவீதமும், நிஃப்டி வங்கி -2.5 சதவீதமும், நிஃப்டி தனியார் வங்கி -2.5 சதவீதமும், நிஃப்டி எஃப்எம்சிஜி -2.5 சதவீதமும், நிஃப்டி மீடியா -2.33 சதவீதமும், நிஃப்டி ஆயில் & கேஸ் -2.2 சதவீதமும், நிஃப்டி ஆட்டோ -2.2 சதவீதமும், நிஃப்டி உள்கட்டமைப்பு -2 சதவீதமும், நிஃப்டி பார்மா குறியீடு 0.97 சதவீதமும் மற்றும் நிஃப்டி மெட்டல் குறியீடு 0.9 சதவீதமும் சரிந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 393.19 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 6.18 சதவீதம் உயர்ந்து $78.74 ஆக உள்ளது.

summary

The benchmark equity indices Sensex and Nifty fell sharply on Wednesday trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments