முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை வீழ்ச்சி: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி... சென்செக்ஸ் 370 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 372.10 புள்ளிகள் சரிந்து 76,728.37 புள்ளிகளாகவும், நிஃப்டி 109.75 புள்ளிகள் சரிந்து 23,946.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 29 ஜூன் 2026, 5:33 pm IST
பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களை அச்சுறுத்தியதால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 478.72 புள்ளிகள் உயர்ந்து 76,621.75 புள்ளிகள் வரை சென்றது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 372.10 புள்ளிகள் சரிந்து 76,728.37 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 109.75 புள்ளிகள் சரிந்து 23,946.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அசோக் வஸ்வானி, தனது மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்ததும் விலகவுள்ளதாகவும், டிசம்பர் 31, 2026 அன்று முடிவடையும் தற்போதைய பதவிக்காலத்திற்குப் பிறகு மீண்டும் அப்பதவியை ஏற்கப்போவதில்லை என்றும் அறிவித்ததைத் தொடர்ந்து, வங்கியின் பங்கு விலை 3.24 சதவீதம் சரிந்தன.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி, இன்டர்குளோப் ஏவியேஷன், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட பங்குகளும் சரிந்தன. மாறாக எடர்னல், டிரெண்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் என்டிபிசி ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.4 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.6 சதவீதமும் சரிந்தன.

துறைகளைப் பொறுத்தவரை, ஆட்டோ குறியீடு 2% சரிந்த அதே சமயம் பொதுத்துறை வங்கி, ஊடகம், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடும் தலா 1% சரிந்தன. மறுபுறம், உலோகம், மருந்து, சுகாதாரம் ஆகியவை 0.5 முதல் 1% வரை உயர்ந்தன.

வார இறுதியில், அமெரிக்காவும் ஈரானும் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டதால் பதற்றங்கள் அதிகரித்தன. பிறகு, பகைமையை மறந்து பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதால், இழப்புகள் கட்டுக்குள் இருந்தன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி சரிவுடன் முடிவடைந்த நிலையில், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்ந்தன.

ஐரோப்பிய சந்தை சரிவுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று சரிவுடன் முடிவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமையன்று ரூ. 383.76 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

சர்வதேச அளவில் 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 1.51 சதவீதம் உயர்ந்து, பீப்பாய்க்கு ஒன்றுக்கு 73.09 அமெரிக்க டாலராக அதிகரித்தது.

டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், நுவமா வெல்த், ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், அரவிந்தோ பார்மா, அப்பல்லோ மருத்துவமனைகள், வெல்ஸ்பன் கார்ப், ஏசிஎம்இ சோலார், ரேடிகோ கைதான், ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.

உலகளாவிய 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 1.51 சதவீதம் உயர்ந்து, பீப்பாய்க்கு ஒன்றுக்கு 73.09 டாலராக அதிகரித்தது.

summary

Benchmark equity indices Sensex and Nifty ended lower on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments