FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!

சென்செக்ஸ் 388.19 புள்ளிகள் சரிந்து 78,154.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 112.10 புள்ளிகள் சரிந்து 24,471.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 5:39 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் உள்ளிட்டவை முதலீட்டாளார்களை அச்சத்தில் அழ்த்தியதால், இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 494.18 புள்ளிகள் சரிந்து, 78,048.26 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 388.19 புள்ளிகள் சரிந்து 78,154.25 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 112.10 புள்ளிகள் சரிந்து 24,471.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, இன்டர்குளோப் ஏவியேஷன், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் எடர்னல், இன்ஃபோசிஸ், டைட்டன், எச்.சி.எல் டெக் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

Advertisement

Advertisement

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சி மற்றும் வாராந்திர ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் காலாவதியுடன் தொடர்புடைய ஏற்ற இறக்கம் ஆகியவை முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியதால், இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்றும் சரிவுடன் நிறைவடைந்தன.

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சுமார் 0.5 சதவீதம் சரிந்த நிலையில், நிஃப்டி 50 குறியீடு 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது முதலீட்டாளர்களை மேலும் அச்சுறுத்தியது. உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்ட புதிய ஏற்றமே இந்த அமர்வின் முக்கியத் தடையாக அமைந்தது.

சாதகமான வருவாய் பின்னணி இருந்தபோதிலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மீட்சியானது, மீண்டும் பணவீக்க அபாயங்கள் நோக்கி சென்றதால், முதலீட்டாளர்களின் உற்சாகத்தை இது வெகுவாக தணித்தது. மேலும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்த கவலைகள் முதலீட்டாளர்களின் மனநிலையை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்தது. குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்தச் சூழல் நிலவி வருகிறது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு உயர்வுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் சரிவுடன் நிலைபெற்றன. விடுமுறை காரணமாக ஜப்பான் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமான நிலையில், அமெரிக்கச் சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 1,974.76 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2.18 சதவீதம் உயர்ந்து 89.63 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Benchmark indices Sensex and Nifty ended lower on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments