FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கச்சா எண்ணெய், வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சென்செக்ஸ் 777.94 புள்ளிகள் சரிந்து 74,003.82 புள்ளிகளாகவும், நிஃப்டி 279.50 புள்ளிகள் சதவீதம் சரிந்து 23,118.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

15 செப்டம்பர் 2026, 5:18 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: உயர்ந்து வரும் எண்ணெய் விலை, அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய சந்தையில் நிலவும் பலவீனமான போக்கு ஆகியவற்றின் மத்தியில், சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி குறியீடு, ஐந்து மாத சரிவில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் உயர்வாகத் தொடங்கிய போதிலும், விற்பனை வேகம் அதிகரித்ததால் காலை நேர வர்த்தகத்தின் பிற்பகுதியில் அதன் வேகம் தணிந்தது. வர்தக முடிவில், வங்கி, ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகளில் ஏற்பட்ட சரிவால் சென்செக்ஸ் 777.94 புள்ளிகள் சரிந்து, மூன்று மாதங்களில் இல்லாத அளவு குறைந்தபட்ச அளவான 74,003.82 புள்ளிகளாகவும், நிஃப்டி 279.50 புள்ளிகள் சதவீதம் சரிந்து 23,118.60 புள்ளிகளாக நிலைபெற்றது. இது ஏப்ரல் 6 ஆம் தேதிக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த இறுதி நிலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் 6 சதவீதம் சரிந்த நிலையில், இன்டர்குளோப் ஏவியேஷன், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பங்குகளும் சரிந்தன. மறுபுறம் எச்.சி.எல் டெக் 3.98 சதவீதம், இன்ஃபோசிஸ் 3.64 சதவீதம், டெக் மஹிந்திரா 2.31 சதவீதம் உயர்ந்தன. அதே வேளையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.18 சதவீதமும் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி 1.27 சதவீதமும் உயர்ந்தன.

Advertisement

Advertisement

உயர்ந்த வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய பத்திர வருவாய்கள் உள்ளிட்டவை பங்குச் சந்தையை பாதித்ததால், உள்நாட்டுச் பங்குச் சந்தையானது சரிந்தன. இந்த வாரம் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கிக் கூட்டங்களுக்கு முன்னதாக, முக்கியப் பொருளாதார கொள்கையை இது மேலும் இறுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர்.

குறிப்பாக அமெரிக்காவில், நீண்டகால உயர் வட்டி சூழல் குறித்த அச்சம், கருவூலப் பத்திரங்களின் வருவாய் மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி உள்ளிட்டவையால், பங்குச் சந்தையை கட்டுக்கோப்பில் வைத்தது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி தொய்வாக இருப்பதாக உள்ள கருத்துக்களால், தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட சீர்குலைவு குறித்த அச்சங்கள் வெகுவாக தணித்ததால், தகவல் தொழில்நுட்பப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன.

ஆசியச் சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் எதிர்மறை நிலையில் வர்த்தகமாகின. அமெரிக்கச் பங்குச் சந்தை நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 107.40 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாலும், அமெரிக்கப் பத்திரங்களின் வருவாய் உயர் நிலையில் இருந்ததாலும், ஃபெடரல் ரிசர்வின் வங்கியின் முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்ததாலும், இந்தியப் பங்குகள் சரிந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 930.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.89 சதவீதம் உயர்ந்து 107.7 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Benchmark Sensex tanked 778 points while Nifty closed at a five-month low on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments