வணக்கம் சென்னை.. சத்தீஸ்கர் பெருமைகளை பட்டியலிட்ட சோலை பாரதிதாசன் ஐஏஎஸ்!
சுற்றுலா சிறப்பு கருத்தரங்கில் சத்தீஸ்கர் செயலாளர் சோலை பாரதிதாசன் ஐஏஎஸ் பேசுகையில்
ஒரே ஒரு முறை சத்தீஸ்கருக்கு வந்தால் மறக்க முடியாத ஆயிரக்கணக்கான அனுபவங்களைப் பெற முடியும் என சத்தீஸ்கர் மாநில சற்றுலா, கலாசாரம், அறநிலையத்துறை செயலராக பதவி வகிக்கும் சோலை பாரதிதாசன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் பங்கேற்று, சத்தீஸ்கர் மாநில சுற்றுலா பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார் தமிழகத்தைச் சேர்ந்த சோலை பாரதிராசன்.
Advertisement
Advertisement
அப்போது அவர் பேசுகையில், வணக்கம் சென்னை என தமிழில் தன்னுடைய உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் தன்னுடைய முதல் வீடு, சத்தீஸ்கர் இரண்டாவது வீடு. ஒரே ஒரு முறை சத்தீஸ்கருக்கு வந்தால் மறக்க முடியாத ஆயிரக்கணக்கான அனுபவங்களைப் பெற முடியும்.
ஒரு மாநிலம், பல வகையான நிலப்பரப்பு, பழங்குடியின மக்கள் வாழும் பகுதி, சிறந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைக் கலைகளைக் கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் மிகச் சிறந்த இயற்கையான சுற்றுலாவைத் தேடுவோரின் சரியான தெரிவாக உள்ளது.
தற்போதைய இளம் தலைமுறையினர் இயற்கை, மிகப் பழமையான, சாகசம் நிறைந்த சுற்றுலாவை விரும்புவார்கள். அவர்களுக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது.
சுற்றுலா வரும் மக்கள், சுற்றுலா தலம் மற்றும் அவர்களது கலாசாரத்துடனும் இணையும் வகையில் அமைந்திருக்கும். அதுபோல, இங்கு வரும் மக்களும் மரியாதையுடனும் பொறுப்புடனும் சுற்றுலாவை அமைத்துக் கொள்ளுங்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு விதமான நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கும், நீர்வீழ்ச்சி, மலைப்பாங்கு, அடர்ந்த வனப்பகுதி, ஆறுகளைப் போன்ற சாலைகள் கொண்டது. இங்குள்ள சித்ரகூட் நீர்வீழ்ச்சி.. இந்தியாவின் நயாக்ரா எனப் புகழப்படும் நீர்வீழ்ச்சி. இந்த தண்ணீர் சுவர், சுமார் 90 அடி பள்ளத்தில் விழுந்து சுமார் 300 அடி நீளத்துக்கு கர்ஜித்தபடி பாய்ந்தோடும் மழைக்காலங்களில்.
விரைவாக சத்தீஸ்கர் வாருங்கள், ஏனென்றால் விரைவில் மழைக்காலம் வருகிறது, மழைக்காலத்தில்தான் சித்ரகூட் நீர்வீழ்ச்சியின் முழு அழகையும் ரசிக்க முடியும். இங்கு இயற்கை வெறும் பின்னணியில் மட்டும் இல்லை, இயற்கைதான் இங்கு முக்கிய கதாபாத்திரமே என்றும் சத்தீஸ்கரின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
Hello Chennai... IAS officer lists the glories of Chhattisgarh!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.