கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!
சென்செக்ஸ் 70.71 புள்ளிகள் சரிந்து 78,009.25 புள்ளிகளாகவும், நிஃப்டி 29.85 புள்ளிகள் சரிந்து 24,366 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையிலான நீண்டகால மோதல் போக்கு ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 395.59 புள்ளிகள் சரிந்து 77,684.37 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 70.71 புள்ளிகள் சரிந்து 78,009.25 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 29.85 புள்ளிகள் சரிந்து 24,366 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஏசியன் பெயின்ட்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், என்டிபிசி, பவர் கிரிட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் எச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டைட்டன் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
Advertisement
Advertisement
துறைகளைப் பொறுத்தவரை நிஃப்டி-யில், ஆட்டோ, எரிசக்தி, எஃப்எம்சிஜி, உலோகம், மருந்து, ரியல்டி ஆகியவை 0.3 முதல் 1% வரை சரிந்தன. அதேசமயம் நுகர்வோர் பொருட்கள், ஊடகம் ஆகியவை தலா கிட்டத்தட்ட 1% லாபம் ஈட்டின.
இந்த வாரத்தில், சென்செக்ஸ் 0.6 சதவீதமும், நிஃப்டி 0.8% சரிந்தன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.5 சதவீதம் சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.7 சதவீதமும் சரிந்தன.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமைய) ரூ. 510.69 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்வுடன் நிறைவடைந்தன.ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் இன்று பெரும்பாலும் உயர்வுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்கச் சந்தைகள் நேற்று நேர்மறையான நிலையில் நிறைவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.17 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 87.15 அமெரிக்க டாலராக உள்ளது.
Sensex and Nifty ended lower on Friday as elevated oil prices weighed on.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.