FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கர்நாடக பேரவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ். பாட்டீல் தேர்வு!

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ். பாட்டீல் தேர்வு...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:35 pm IST
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ். பாட்டீல் - கோப்புப் படம்
பகிர்:

கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.எஸ். பாட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல்வராகப் பதவி வகித்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, ஜூன் மாதம் புதிய முதல்வராகப் பதவியேற்ற டி.கே. சிவகுமாரின் அமைச்சரவை முழுவதுமாக ஆக.3 அன்று நிரப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் சிவகுமாரின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றதால் சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்து வந்த யூ.டி. காதர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, இடைக்கால பேரவைத் தலைவராக டி.பி. ஜெயசந்திரா பதவியேற்றுக் கொண்டார்.

Advertisement

Advertisement

கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 14) நடைபெற்ற பேரவைத் தலைவருக்கான தேர்தலில் முதல்வர் டி.கே. சிவகுமாரின் ஆதரவுபெற்று போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் குருபடகௌடா சங்கனகௌடா பாட்டீல் (எ) ஜி.எஸ். பாடீல் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலை, எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் ஜனதா தளம் ஆகியவை புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.எஸ். பாட்டீஸ் 4 ஆவது முறையாக ரோன் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Senior Congress leader G.S. Patil has been elected as the Speaker of the Karnataka Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments