FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கர்நாடக பேரவையில் இரு சரணங்களுடன் ‘வந்தே மாதரம்’ நிறுத்தம்! முழுமையாக பாடிய பாஜக எம்எல்ஏக்கள்!

கர்நாடக பேரவையில் வந்தே மாதரம் பாடல் இரு சரணங்கள் மட்டுமே பாடப்பட்டதால் சலசலப்பு...

21 செப்டம்பர் 2026, 12:26 pm IST
கர்நாடக பேரவை - Phto: Doordarshan Chandana
பகிர்:

கர்நாடக சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடல் இரண்டு சரணங்களுடன் நிறுத்தப்பட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழுமையாக பாடினர்.

கர்நாடக சட்டப்பேரவையில் மூன்று நாள்கள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ ஒலிக்கப்பட்டது. ஆனால், முதல் இரண்டு சரணங்களுடன் நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் வாசிக்கத் தொடங்கும்போது, எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்கள் வந்தே மாதரத்தின் முழுப் பாடலையும் பாடத் தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், பேரவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அரசிலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில், காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மாநில அரசு தொடர்புடைய நிகழ்வுகளில் வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்கள் மட்டுமே பாட வேண்டும் என்றும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர், பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில் மட்டும் முழுமையாக பாட விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 6 சரணங்களையும் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், வந்தே மாதரம் பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாடுவது என கடந்த 1937, செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும், காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

summary

Vande Mataram halted after two stanzas in the Karnataka Assembly - BJP MLAs sang the full version

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments