FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாக சித்திரிக்கிறது பாஜக! பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு

பாஜக மீது கர்நாடக அமைச்சரின் கடும் குற்றச்சாட்டு..

8 அக்டோபர் 2026, 1:53 pm IST
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே - படம் - ஏஎன்ஐ
பகிர்:

உயிருடன் இருக்கு குடிமக்களை இறந்துவிட்டதாக அறிவித்து வாக்காளர் நீக்கத்திற்கான படிவங்களை மோசடியாக தாக்கல் செய்ததாக பாஜக தலைவர்கள் மீது கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றம் சாட்டினார்.

செய்திகயாளர்களிடம் பேசிய கார்கே,

பாஜக எம்.எல்.ஏ.க்கள், உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்கள் என்று கூறி தவறான படிவம் 7-ஐ சமர்ப்பித்தது அனைவருக்கும் தெரியும். உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாக பாஜக சித்தரிக்கிறது.

Advertisement

Advertisement

அதனால்தான் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்? எங்கே இருக்கிறார்? நாக்பூரில் ஒளிந்து கொண்டிருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக இன்று, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், வாக்காளர் பட்டியலில் இருந்து முறையான வாக்காளர்களை, குறிப்பாகச் சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை மோசடியாக நீக்குவதற்கான ஒரு பெரிய சதி நடைபெறுவதாகக் குற்றம் சாட்டினார்.

பாஜக தலைமையகத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான 'படிவம் 7' விண்ணப்பங்கள் முறையாக முன்பே அச்சிடப்பட்டு, துல்லியமான வாக்காளர் விவரங்களுடன் நிரப்பப்பட்டு, உள்ளூர் தொண்டர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

என் மாநிலத்தில், அவர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயன்றனர். அவர்களது 'படிவம் 7' விண்ணப்பங்கள் பாஜக தலைமையகத்தில் எங்கோ அச்சிடப்பட்டன. அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டவை. உள்ளூர் பாஜக தலைவருக்கு இது பற்றித் தெரியாது. சிறுபான்மையினர், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருந்தன என்று அவர் கூறினார்.

நாங்கள் புகார் அளித்த நிலையில், அவர்கள் உடனடியாக பல வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை அணுகி அந்தப் படிவங்களைத் திரும்பப் பெற்றனர். ஆனால், என்னிடம் இதுபோன்ற படிவங்கள் நிரம்பிய ஒரு பை உள்ளது. இதுபோன்ற லட்சக்கணக்கான படிவங்களை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இது குற்றமல்லவா?" என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments