FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி பெறுவது அவசியம்! - பிரியங்க் கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு!

பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி பெற வேண்டுமென கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு...

26 வினாடிகள் முன்பு
கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே - கோப்புப் படம்
பகிர்:

பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிக்கு அனுமதி பெற வேண்டுமென கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி நடத்துவதாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பது அனுமதி கோருவதாகக் கருத முடியது எனவும், முறையான அனுமதிகளைப் பெற அந்த அமைப்பு விண்ணப்பிக்க வேண்டுமெனவும், கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 20) கூறியிருந்தார்.

இத்துடன், கடந்த 2025-26 காலத்தில் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட 562 ஆர்.எஸ்.எஸ். பேரணிகளில் சீருடை அணிந்த 2,21,963 பேர் பங்கேற்ற நிலையில், இத்தகைய நிகழ்வுகளுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதால் முறையாக விண்ணப்பித்து அதிகாரிகளின் அனுமதிக்குக் காத்திருங்கள் என அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமைச்சர் பிரியங்க் கார்கேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஷேஷராகவச்சார், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைச் சுட்டுக்காட்டி,

“இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்க ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளை விட்டு விலகி இருங்கள்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, வரும் அக். 25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The BJP has opposed Karnataka Home Minister Priyank Kharge's statement that permission should be sought for rss rally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments