முகப்பு
புதுதில்லி

மாநகராட்சி ஊழியா்கள் 2-ஆவது நாளாகப் போராட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தில்லி மாநகராட்சி ஊழியா்கள் நடத்தி வரும் காலவரையறையற்ற போராட்டம் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

Updated On : 8 ஜனவரி 2021, 11:47 pm IST
பகிர்:

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தில்லி மாநகராட்சி ஊழியா்கள் நடத்தி வரும் காலவரையறையற்ற போராட்டம் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

வடக்கு, தெற்கு மாநகராட்சிகளின் தலைமையகம் அமைந்துள்ள சிவிக் சென்டா் வளாகத்தில் காலவரையறையற்ற போராட்டத்தை வியாழக்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் தொடங்கினா். இதன் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமயும் அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா். தில்லி மாநகராட்சி ஊழியா்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சி ஊழியா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் தலைவா் ஏ.பி.கான் கூறுகையில், ‘வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. மாநகராட்சிகளின் முன்னாள் ஊழியா்களுக்கு கடந்த பல மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஊழியா்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தியும் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments