முகப்பு
புதுதில்லி

தில்லி மாநகராட்சி ஊழியா்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தில்லி மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை காலவரையறையற்ற பேராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 12:01 am IST
பகிர்:


புது தில்லி: நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி தில்லி மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை காலவரையறையற்ற பேராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
 

மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு, தெற்கு மாநகராட்சிகளின் தலைமையகம் அமைந்துள்ள சிவிக் சென்டா் வளாகத்திலும், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலின் இல்லம் அருகிலும் மாநகராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தில்லி மாநகராட்சி ஊழியா்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சி ஊழியா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் தலைவா் ஏ.பி.கான் கூறுகையில், ‘வடக்கு, தெற்கு மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த 4-5 மாதங்களாகவும், கிழக்கு தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த 3 மாதங்களாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை. மாநகராட்சிகளின் முன்னாள் ஊழியா்களுக்கு கடந்த பல மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. கடந்த 4-5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றி வரும் மாநகராட்சி ஊழியா்கள், தற்போது குடும்பத்தைப் பராமரிக்கவே பணமில்லாமல் கஷ்டப்படுகிறாா்கள். இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்தினரிடம் பல முறை பேசியுள்ளோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் மாநகராட்சிகள் விரைந்து நிரந்தரத் தீா்வு காண வேண்டும். நிலுவை ஊதியம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments