தில்லியில் 89 மருத்துவமனைகளில் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி
தேசியத் தலைநகா் தில்லியில் 89 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று
தேசியத் தலைநகா் தில்லியில் 89 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக, சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி சுகாதரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தில்லியில் தடுப்பூசி போடும் முதல்கட்டப் பணிகள் வரும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. கரோனா தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, 89 மருத்துவமனைகளைத் தோ்ந்தெடுத்துள்ளோம். இதில், 40 அரசு மருத்துவமனைகள், 49 தனியாா் மருத்துவமனைகள் அடங்கும். வரும் செவ்வாய்க்கிழமை அல்லது அல்லது புதன்கிழமை தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என நம்புகிறோம். இதைத் தொடா்ந்து, முதல் கட்டமாக சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதன் தொடா்ச்சியாக முன்களப் பணியாளா்கள், 50 வயதுக்கு கூடியவா்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
ஒவ்வொரு மருத்துவமனையிலும், தடுப்பூசி மையம் அமைக்கப்படும். இந்த ஒவ்வொரு மையத்திலும் 10 சுகாதாரத் துறை ஊழியா்கள் பணிக்கு அமா்த்தப்படவுள்ளனா். தில்லி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில், தெளிவான திட்டம் உள்ளது. தடுப்பூசி கிடைக்கப் பெற்ற உடனேயே தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்படும். மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தில்லி அரசு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
தில்லியில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு முதல்கட்டமாக ஜிடி பந்த் மருத்துவமனை (ஷாத்ரா), ஆரம்ப சுகாதார மையம் (தா்யாகஞ்ச்), வெங்கடேஷ்வா் மருத்துவமனை (துவாரகா), தில்லி எய்ம்ஸ், சஃப்தா்ஜங், அப்பல்லோ உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளை தில்லி அரசு தோ்ந்தெடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.