முகப்பு
புதுதில்லி

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:59 AM
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்ததன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று மேலே சென்றது. இந்நிலையில், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல இராணுவ இலக்குகளை தாக்க பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை இரவு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி முயற்சித்ததை இந்திய ஆயுதப் படைகள் முறியடித்ததாகவும், லாகூரில் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்ததைத் தொடர்ந்து சந்தை சரிவுடன் முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

Advertisement

சந்தை மதிப்பு:

மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.40 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.418.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.2,585.86 கோடிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,378.49 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 165.56 புள்ளிகள் கூடுதலுடன் 80,912.34-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,927.99 வரை மேலே சென்றது. பின்னர், 79,987.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 411.97 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 80,334.81-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,032 பங்குகளில் 1,349 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலிலும் 2,548 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 135 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

23 பங்குகள் விலை வீழ்ச்சி:

சென்செக்ஸ் பட்டியலில் எடர்னல், எம் அண்ட் எம், மாருதி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட் உள்பட 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்சிஎல்டெக், கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் ஆகிய 7 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 141 புள்ளிகள் சரிவு:

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17.10 புள்ளிகள் கூடுதலாக 24,431.50-இல் தொடங்கி 24,150.20 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 24,447.25 வரை மேலே சென் நிஃப்டி, இறுதியில் 140.60 புள்ளிகள் (0.58 சதவீதம்) சரிந்து 24,273.80-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலிலும், 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

சந்தை மதிப்பு:

மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.5.40 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.418.11 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.2,585.86 கோடிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,378.49 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 165.56 புள்ளிகள் கூடுதலுடன் 80,912.34-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,927.99 வரை மேலே சென்றது. பின்னர், 79,987.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 411.97 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 80,334.81-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,032 பங்குகளில் 1,349 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலிலும் 2,548 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 135 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments