FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

சென்செக்ஸ் 64.42 புள்ளிகள் உயர்ந்து 73,983.18 புள்ளிகளாகவும், நிஃப்டி 27.15 புள்ளிகள் சரிந்து 23,214.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 10 ஜூன் 2026, 5:40 pm IST
மும்பை பங்குச் சந்தை - DIN
பகிர்:

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் சூழல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்ததால், முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்றைய நாள் உச்சத்திலிருந்து சரிந்து, கிட்டத்தட்ட மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறி வருவதும் முதலீட்டாளர்களைக் கவனமாகச் செயல்படத் தூண்டியதாக பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 694.25 புள்ளிகள் உயர்ந்து 74,613.01 புள்ளிகளை எட்டிய நிலையில், நிஃப்டி குறியீடும் அதிகபட்சமாக 23,425.35 புள்ளிகளையும், குறைந்தபட்சமான 23,184.60 புள்ளிகளையும் எட்டியது.

Advertisement

Advertisement

வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 64.42 புள்ளிகள் உயர்ந்து 73,983.18 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு 27.15 புள்ளிகள் சரிந்து 23,214.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் எடர்னல் லிமிடெட், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில், நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் கோல் இந்தியா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி மற்றும் எடர்னல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

துறைவாரியாக, எஃப்எம்சிஜி மற்றும் தனியார் வங்கிப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில் மற்ற அனைத்து முக்கிய குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன. ஊடகம், ரியல் எஸ்டேட், எரிசக்தி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகள் 1 முதல் 2% சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே சுமார் 1.5% மற்றும் 1.3% சரிந்தன.

சென்னை பெட்ரோ, ஆஸ்டர் டிஎம் ஹெல்த், அப்பல்லோ மருத்துவமனைகள், சைடஸ் லைஃப், சாய் லைஃப் சயின்ஸ், ஆர்பிஎல் வங்கி, ஃபெடரல் வங்கி, ஜேகே வங்கி, சிர்மா எஸ்ஜிஎஸ், டேட்டா பேட்டர்ன்ஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி 4.52 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 1.89 சதவீதமும் சரிந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் சரிந்து நிறைவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகளும் சரிவுடனேயே வர்த்தகமான நிலையில், அமெரிக்கச் சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் சரிவுடனேயே நிறைவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 4,566.03 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல் சூழல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக பாதித்ததாலும், புதிய ராணுவ மோதல்கள், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால், உலகளாவிய சந்தைகள் சரிந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.20 சதவீதம் சரிந்து 91.27 அமெரிக்க டாலராக குறைந்தது.

summary

Benchmark indices Sensex and Nifty retreated from their day's high and ended flat on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments