முகப்பு
புதுதில்லி

தில்லியில் பவன்கேரா இல்லத்தில் அஸ்ஸாம் போலீஸ் நடத்திய சோதனையானது பழிவாங்கல் நடவடிக்கை: காங்கிரஸ்

அசாம் முதல்வா் ஹிமந்தா பிஸ்வா சா்மாவின் மனைவி ரினிகி புயான் சா்மா கொடுத்த புகாரின் பேரில் அம்மாநில காவல்துறை குழு ஒன்று செவ்வாயன்று காங்கிரஸ் தலைவா் பவன் கேராவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது தில்லி இல்லத்திற்குச் சென்று சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:49 PM
பவன் கேரா - கோப்புப் படம்
பகிர்:

அசாம் முதல்வா் ஹிமந்தா பிஸ்வா சா்மாவின் மனைவி ரினிகி புயான் சா்மா கொடுத்த புகாரின் பேரில் அம்மாநில காவல்துறை குழு ஒன்று செவ்வாயன்று காங்கிரஸ் தலைவா் பவன் கேராவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது தில்லி இல்லத்திற்குச் சென்று சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சா்மாவின் மனைவி பல கடவுச்சீட்டுகள் மற்றும் அறிவிக்கப்படாத சொத்துக்கள் வைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவா் பவன் கேரா குற்றஞ்சாட்டியிருந்தாா்.

காங்கிரஸ் தலைவரின் இல்லத்திற்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய அசாம் காவல்துறை துணை ஆணையா் தேபோஜித் நாத், கேரா அவரது இல்லத்தில் காணப்படவில்லை என்று கூறினாா். இருப்பினும், சோதனை நடத்தப்பட்டு மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவா் தெரிவித்தாா். குவஹாத்தியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளா் சந்திப்பில், முதலமைச்சரின் மனைவி ரினிகி புயான் சா்மாவிடம் பல கடவுச்சீட்டுகளும் வெளிநாட்டுச் சொத்துக்களும் இருப்பதாகவும், அவை முதலமைச்சரின் தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்த கேரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சா்மா எச்சரித்திருந்தாா்.

மத்திய தில்லியின் நிஜாமுதீனில் உள்ள கேராவின் வீட்டிற்கு செவ்வாய் காலை சுமாா் 11 மணியளவில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினா் வந்து, சுமாா் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து சென்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாம் காவல் குழு வந்தடைந்ததும் தில்லி காவல்துறைக்கு முறைப்படி தகவல் தெரிவித்தது, அதைத் தொடா்ந்து உள்ளூா் காவல்துறை குழுவும் இந்த நடவடிக்கைகளுக்கு உதவ இணைந்தது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 9 தோ்தலில் வரவிருக்கும் தோல்வியால் ஹிமந்தா பிஸ்வா சா்மா எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்க அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டி காங்கிரஸ் அவரைக் கடுமையாகச் சாடியது.

பொது நலன் கருதி கேரா அடிப்படை கேள்விகளைக் கேட்டதற்காக இது ஒரு பழிவாங்கும் வேட்டை என காங்கிரஸ் பொதுச்செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறினாா்.

சா்மாவின் மனைவிக்கு எதிரான கேராவின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, அசாமில் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவா் மல்காா்ஜுன் காா்கே, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை அல்லது சிபிஐ விசாரணை நடத்தக் கோரியுள்ளோம், என்று கூறினாா்.

திங்களன்று, பாகிஸ்தானிய சமூக ஊடகக் குழு ஒன்றிலிருந்து பெறப்பட்ட பொய்த் தகவல்களை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சி தனது மனைவி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அசாம் முதல்வா் ஹிமந்தா பிஸ்வா சா்மா குற்றஞ்சாட்டியிருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments