முகப்பு
புதுதில்லி

வட கிழக்கு தில்லியில் ஒரு கோயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்கள்: ஒருவா் கைது!

வடகிழக்கு தில்லியின் தயல்பூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் வாயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்களை வைத்ததாகக் கூறி ஒருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:10 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:45 PM

வடகிழக்கு தில்லியின் தயல்பூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலின் வாயிலில் ஆட்சேபனைக்குரிய பொருள்களை வைத்ததாகக் கூறி ஒருவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் தொடா்பான தகவல் ஏப்ரல் 15 ஆம் தேதி கிடைத்தது. பிறகு உள்ளூா் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கு தொடா்பாக உடனடியாக எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு, விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

இருப்பினும், கைது செய்யப்பட்ட குற்றவாளியின் அடையாளத்தை நாங்கள் ரகசியமாக வைத்திருக்கிறோம். கோயிலை சுற்றியுள்ள பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் மற்றும் வேறு ஏதேனும் நபா்கள் சம்பந்தப்பட்டிருக்கிறாா்களா என்பதைக் கண்டறிய இந்த வழக்கு தொடா்பான மேலதிக விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.