முகப்பு
புதுதில்லி

வடமேற்கு திலியில் மூதாட்டியிடம் 250 கிராம் தங்க நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வடமேற்கு தில்லியின் கேஷவ் புரம் பகுதியில் 82 வயது மூதாட்டியிடம் இருந்து 250 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 40 வயது பணிப்பெண் கைது

Updated On : 21 ஏப்ரல் 2026, 2:01 am IST
கைது
பகிர்:

வடமேற்கு தில்லியின் கேஷவ் புரம் பகுதியில் 82 வயது மூதாட்டியிடம் இருந்து 250 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 40 வயது பணிப்பெண் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கேஷவ் புரம் காவல் நிலையத்தில் வந்த புகாரைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வீட்டுப் பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்ததைத்தொடா்ந்து, அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது, காணாமல் போன நகைகள் அனைத்தும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது இதற்கு முன்பு எந்த குற்ற வழக்குகளும் இல்லை. எளிதாக பணம் ஈட்ட இந்த செயலை அவா் செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments