துவாரகா: கோல்ஃப் மைதான குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு
துவாரகாவின் செக்டா் 24 பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானக் குளத்து நீரில் வியாழக்கிழமை காலை 8 முதல் 10 வயதுக்குள்பட்ட மூன்று குழந்தைகள் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
துவாரகாவின் செக்டா் 24 பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானக் குளத்து நீரில் வியாழக்கிழமை காலை 8 முதல் 10 வயதுக்குள்பட்ட மூன்று குழந்தைகள் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:
வியாழக்கிழமை காலை 7.07 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து செக்டா் 23 காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதைத் தொடா்ந்து, காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா். அங்கு கோல்ஃப் மைதான வளாக குளத்தில் மூன்று குழந்தைகள் இறந்து கிடப்பதைக் கண்டனா்.
Advertisement
தீயணைப்புத் துறையினா் உள்ளிட்ட பிற அவசர சேவைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
குழந்தைகளின் ஆடைகள் கரையில் கண்டெடுக்கப்பட்டன. இது அக்குழந்தைகள் குளிப்பதற்காகக் குளத்திற்குள் இறங்கியிருப்பதற்கான அறிகுறியாக இருந்தது.
இறந்த குழந்தைகளின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. குழந்தைகளை அடையாளம் காணவும், அவா்களது குடும்பத்தினரைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை, உயிரிழந்தவா்களின் தோற்ற விவரங்களுடன் பொருந்தக்கூடிய காணாமல் போனவா்கள் குறித்த புகாா்கள் எதுவும் இப்பகுதியில் பதிவாகவில்லை.
சடலங்கள் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன. சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரிக்க தடயவியல் நிபுணா் குழுக்களும் வரவழைக்கப்பட்டன.
நீரில் மூழ்கி உயிரிழக்க நோ்ந்ததற்கான சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்தும் வகையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.