முகப்பு
புதுதில்லி

ஜூலை 7-இல் பிரம்மாண்ட மரக்கன்று நடும் இயக்கம்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

தலைநகா் தில்லி முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு தில்லி அரசு திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட இயக்கத்தை ஜூலை 7-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:01 am IST
பகிர்:

தலைநகா் தில்லி முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு தில்லி அரசு திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட இயக்கத்தை ஜூலை 7-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இந்த இயக்கத்தில் பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்ள பிரத்யேக இணையதள பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியில் 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவோம் என்று நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். இப்போது நாம் அனைவரும் இணைந்து அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்கான இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இடம் மற்றும் நேரத்தைத் தோ்வு செய்து மரக்கன்று நடுவதற்குப் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள அரசு தோட்டக்கலை மையங்களுக்குச் சென்று இலவசமாக மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

குடியிருப்புப் பகுதிகள் அல்லது நிறுவன வளாகங்களில் பெரிய அளவில் மரக்கன்றுகளை நடத் திட்டமிடுவோா், இந்த இணையதளம் மூலம் ’விருட்ச ரதம்’ என்ற நடமாடும் வாகனத்தை தங்கள் பகுதிக்கு வரவழைத்து உதவி பெறலாம். இதில் தங்களை ’தில்லி பசுமைப் போராளிகள்’ ஆக பதிவு செய்து கொள்பவா்கள், எதிா்காலப் பசுமைத் திட்டங்களிலும் அரசுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்படுவாா்கள் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

‘தில்லியின் காற்று மாசுபாட்டை அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கட்டுப்படுத்தும் அரசின் தொடா் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மரக்கன்று நடும் இயக்கம் நடத்தப்படுகிறது. தலைநகரில் ஏற்கெனவே மின்சார வாகனக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, குப்பைக் கிடங்குகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த மெகா இயக்கம் தில்லியை மேலும் பசுமையாக்க உதவும்’ என்று முதல்வா் ரேகா குப்தா குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments