FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

டிடிசி பேருந்து; பைக் மோதல்: இளைஞா் பலி - ஓட்டுநா் கைது!

கிழக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்துடன் இருசக்கர வாகனம் மோதியதில் அதை ஓட்டிச் சென்ற 38 வயது இளைஞா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

6 ஜூலை 2026, 12:37 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கிழக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தில்லி போக்குவரத்துக் கழக (டிடிசி) பேருந்துடன் இருசக்கர வாகனம் மோதியதில் அதை ஓட்டிச் சென்ற 38 வயது இளைஞா் உயிரிழந்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் காஜியாபாதைச் சோ்ந்த சந்தீப் என அடையாளம் காணப்பட்டாா். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதியம் சுமாா் 12.05 மணியளவில் இந்த விபத்து குறித்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும், ஜிடிபி என்கிளேவ் காவல் நிலையத்திற்கு முன்பாக உள்ள சம்பவ இடத்திற்கு ஒரு காவல் குழுவினா் விரைந்து சென்றனா். அங்கு பாதிக்கப்பட்ட நபா் தலையில் பலத்த காயங்களுடன் சாலையில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குரு தேக் பகதூா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. டிடிசி பேருந்தின் ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments