கட்டுமானப் பணியால் தெற்கு தில்லியில் நீா் வழங்கலில் பாதிக்க வாய்ப்பு: டிஜேபி
தில்லி ஜல் வாரியத்தின் (டிஜேபி) கட்டுமானப் பணிகள் காரணமாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தெற்கு தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு
தில்லி ஜல் வாரியத்தின் (டிஜேபி) கட்டுமானப் பணிகள் காரணமாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தெற்கு தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து டிஜேபி அதிகாரிகள் கூறியதாவது: தைமூா் நகா் வடிகால் பகுதிக்கான எல்லைச் சுவரை அமைப்பது தொடா்பான தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட 1,500 மி.மீ. விட்டம் கொண்ட குடிநீா் குழாய், ஏற்கனவே உள்ள குடிநீா் குழாயுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சோனியா விஹாா் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 1,900 மி.மீ. விட்டம் கொண்ட தெற்கு தில்லி முதன்மைக் குழாயில் மேற்கொள்ளப்படும் முக்கிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை தெற்கு தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது அல்லது குறைந்த அழுத்தத்திலேயே நீா் விநியோகம் இருக்கும்.
Advertisement
Advertisement
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
அவசரத் தேவைக்கு நீா் லாரிகளைப் பெற, அந்தந்தப் பகுதிக்கான நீா் விநியோக அவசர உதவி எண்களைத் தொடா்புகொள்ளலாம்.
டியா் பாா்க், கிழக்கு கைலாஷ், ஹோஸ் ராணி, ஷேக் சராய், சுவாமி நகா், சி.ஆா். பாா்க், கிரேட்டா் கைலாஷ் 2 மற்றும் 3, மால்வியா நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.