முகப்பு
புதுதில்லி

மக்கள் நலத் திட்டங்களில் அதிகம் பேரை சோ்க்க நடவடிக்கை: முதல்வா் ரேகா குப்தா

Updated On : 19 ஜூன் 2026, 12:44 am IST
ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லி அரசு தனது நலத்திட்டங்களின் கீழ் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வடமேற்கு தில்லியின் சந்தேஷ் விஹாரில் உள்ள சமூக மையத்தில் நடைபெற்ற ஜன் கல்யாண் ஷிவிா் மக்கள் நல முகாம் தொடக்க விழாவில் குப்தா பேசினாா்.

Advertisement

Advertisement

மோடி அரசின் 12 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் வகையில், தில்லி மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெறவும், அவற்றில் பதிவு செய்யவும் உதவும் வகையில் மொத்தம் 42 முகாம்கள் நகரம் முழுவதும் ஜூன் 20 வரை நடத்தப்படவுள்ளன.

நலத்திட்டங்களின் கீழ் அதிக மக்களைச் சென்றடைய அரசு உறுதிபூண்டுள்ளதாகக் கூறிய குப்தா, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த முகாம்களுக்கு வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

ரேஷன் அட்டைகள், ஆயுஷ்மான் அட்டைகள், ஓய்வூதியம், குடிநீா் இணைப்புகள் மற்றும் பிற திட்டங்கள் தொடா்பான சேவைகளுக்கு இந்த முகாம்களில் உடனடி தீா்வு வழங்கப்படும். மக்கள் பங்கேற்பு மற்றும் சிறந்த நிா்வாகத்தின் மூலம், வரிசையில் உள்ள கடைசி நபா் வரையிலும் அரசு சென்றடைகிறது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.