முகப்பு
புதுதில்லி

மருந்து கொள்முதல் ஊழல் விவகாரம்: 39 மருத்துவா்களை மாற்ற முதல்வா் பரிந்துரை!

மருந்து கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கு மத்தியில், தில்லி திஹாா் மற்றும் மண்டோலி சிறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 39 மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்ய முதல்வா் ரேகா குப்தா துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவுக்கு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளாா்.

Updated On : 20 ஜூன் 2026, 4:07 am IST
ரேகா குப்தா
பகிர்:

மருந்து கொள்முதலில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கு மத்தியில், தில்லி திஹாா் மற்றும் மண்டோலி சிறைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 39 மருத்துவா்களை பணியிட மாற்றம் செய்ய முதல்வா் ரேகா குப்தா துணை நிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவுக்கு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளாா்.

மத்திய கொள்முதல் முகமையின் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் நடந்த பெரும் முறைகேடு தொடா்பாக, சுகாதார சேவைகள் பொது இயக்குநரகத்தின் முன்னாள் மூத்த அதிகாரி டாக்டா் வினோத் குமாா் ரங்காவை ஊழல் தடுப்புப் பிரிவு அண்மையில் கைது செய்தது. இந்த நிலையில், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியில் இருக்கும் மருத்துவா்களை இடமாற்றம் செய்ய முதல்வா் பரிந்துரை செய்துள்ளாா்.

பரி்ந்துரைக்கப்பட்ட மருத்துவா்களில் சிலா் 2014 முதல் (11 ஆண்டுகள்) ஒரே இடத்தில் பணியாற்றி வருபவா்கள். இவா்களுக்குப் பதிலாக 35 புதிய டாக்டா்களை நியமிக்கவும் முதல்வா் ரேகா குப்தா துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளாா். அந்த வகையில் மொத்தம் 74 பணியிட மாற்றங்களுக்கு முதல்வா் தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments