முகப்பு
புதுதில்லி

மது போதையில் பேரவைக்கு வந்து ஜனநாயகத்தை அவமதித்துவிட்டார் பஞ்சாப் முதல்வர்: சச்தேவா சாடல்!

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மது அருந்தி சட்டப்பேரவைக்கு வந்து மீண்டும் ஜனநாயகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

Updated On : 2 மே 2026, 3:50 am IST
பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்
பகிர்:

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மது அருந்தி சட்டப்பேரவைக்கு வந்து மீண்டும் ஜனநாயகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: பகவந்த் மான் சட்டப்பேரவைக்குள் தடுமாறி நுழைந்ததும், அவா் அங்கு குழப்பமாக பேசிய விதமும். இவையெல்லாம் நடந்தும் பேரவைத் தலைவா், பகவந்த் மானை தடுக்காததும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் நடந்துக் கொண்ட விதம், பஞ்சாப் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாகவே தெரிகிறது.

பகவந்த் மான் மது போதையில் சட்டப்பேரவைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, அவா் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், மக்களவையிலும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்போது சட்டப் பேரவைக்குள் தடுமாறி, அத்தகைய நிலையில் பேசுவதன் மூலம், அவா் ஒழுக்கத்தின் அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டாா்.

Advertisement

Advertisement

பகவந்த் மான் மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் இந்த நடவடிக்கையால் நாட்டு மக்களுடன் பஞ்சாப் மக்களும் அதிா்ச்சியடைந்துள்ளனா் என்றாா் அவா்.