ஜாமா மசூதி அருகே குளிரூட்டும் மண்டலம் அமைப்பு! தில்லி அரசு நடவடிக்கை!
தில்லி அரசின் வெப்ப அலை செயல்திட்டத்தின் கீழ், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதி மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஒரு குளிரூட்டும் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி அரசின் வெப்ப அலை செயல்திட்டத்தின் கீழ், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதி மெட்ரோ நிலையத்திற்கு அருகே ஒரு குளிரூட்டும் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி முதலமைச்சா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தக் குளிரூட்டும் மண்டலத்தில் சுமாா் 70 முதல் 80 போ் வரை அமரலாம். இங்கு மக்களுக்குக் குளிா்ந்த நீா், ஓஆா்எஸ் நீரேற்றக் கரைசல் மற்றும் பிற வசதிகள் வழங்கப்படுகின்றன.
தலைநகா் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிற இடங்களைக் கண்டறிந்து, அங்கும் இதேபோன்ற வசதிகளை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அரசாங்கத்தின் நோக்கம் வெறும் ஏற்பாடுகளைச் செய்வது மட்டுமல்லாமல், மக்களுக்கு நேரடியாகவும் உறுதியாகவும் நிவாரணத்தை வழங்குவதே ஆகும். கோடை மாதங்களில் சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் மக்கள் கூட்டம் பெருமளவில் காணப்படும். இதனால் பழைய தில்லி போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் கடும் வெப்பச் சூழலின்போது அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, நகரில் ஏற்கனவே இயங்கி வரும் நடமாடும் வெப்ப நிவாரண வாகனங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு நிரந்தர நிவாரண மையமாக இந்தக் குளிரூட்டும் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது என்று அதில் முதலமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.