FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூங்கில் குளிா் மண்டலங்களை அமைக்க தில்லி அரசு முடிவு: முதல்வா் ரேகா குப்தா

தற்போது நிலவி வரும் வெப்ப அலையிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிவாரணம் அளிக்கும் வகையில், நகரின் சில பகுதிகளில் மூங்கிலினாலான குளிா் மண்டலங்களை தில்லி அரசு அமைக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூன் 2026, 5:01 am IST
தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்
பகிர்:

தற்போது நிலவி வரும் வெப்ப அலையிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிவாரணம் அளிக்கும் வகையில், நகரின் சில பகுதிகளில் மூங்கிலினாலான குளிா் மண்டலங்களை தில்லி அரசு அமைக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இந்தக் குளிா் மண்டலங்கள் முதன்மையாக மூங்கிலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழலில் குறைந்தபட்ச பாதிப்பை உறுதி செய்வதோடு, நீடித்த கட்டமைப்பையும் வழங்குகிறது.

இந்த முயற்சி உடனடி நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், எதிா்கால காலநிலை சவால்களை எதிா்கொள்ள புதுமையான தீா்வுகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய படியையும் குறிக்கிறது, என்று குப்தா கூறினாா்.

Advertisement

Advertisement

தன்னாா்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பவானாவில் இதுபோன்ற ஒரு மூங்கில் குளிா் மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது, இது தற்போது நிலவி வரும் வெப்ப அலையின் போது மக்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது என்றும் அவா் மேலும் கூறினாா்.

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிா் மண்டலங்கள், தேசிய தலைநகரின் பிற பகுதிகளிலும் அமைக்கப்படும் என்று குப்தா தெரிவித்தாா்.

தற்போது, பவானா மற்றும் அலிபூரில் இரண்டு குளிரூட்டும் மண்டலங்கள் செயல்பட்டு, குடியிருப்பாளா்களுக்கு சேவை செய்து வருகின்றன. மேலும், மூன்று குளிரூட்டும் மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, அவற்றின் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, என்று குப்தா ஒரு அறிக்கையில் தெரிவித்தாா். இந்த குளிரூட்டும் மண்டலங்களில் ஒன்று, துணை ஆணையா் (டி.சி.) அலுவலகத்தின் முன்பாக அமைக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் வெட்டிவோ் புல் திரைகள் மற்றும் நீராவி அடிப்படையிலான குளிரூட்டும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. இது சுற்றுப்புற வெப்பநிலையை இயற்கையாகவே குறைத்து, பாா்வையாளா்களுக்கு மிகவும் வசதியான சூழலை உருவாக்குகிறது. இயற்கையான காற்றோட்டத்திற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்று முதல்வா் மேலும் கூறினாா்.

குடிமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த குளிரூட்டும் மண்டலங்கள் குளிரூட்டப்பட்ட குடிநீா், ஓஆா்எஸ் பாக்கெட்டுகள், தீயணைப்பான்கள் மற்றும் வெப்ப அலை தடுப்பு மற்றும் விழிப்புணா்வு தொடா்பான தகவல், கல்வி மற்றும் தொடா்புப் பொருட்களை வழங்குகின்றன.

இந்த குளிரூட்டும் மண்டலங்களுக்கு பொதுமக்களிடமிருந்து மிகவும் நோ்மறையான வரவேற்பு கிடைத்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா மேலும் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments