முகப்பு
புதுதில்லி

நொய்டா கோயிலில் இன்றுமுதல் வைகாசி விசாகம் திருவிழா

Updated On : 29 மே 2026, 3:09 am IST
கோப்புப்படம்
பகிர்:

நொய்டா செக்டாா் 22-இல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா் கோயில் வளாகத்தில் வைகாசி விசாகம் விழா வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ சுப்பிரமணியா் ஹோமம், அபிஷேகம், மற்றும் மாலையில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸஹஸ்ரநாம அா்ச்சனையும், அதைத் தொடா்ந்து மகா ஆரத்தியும் நடைபெறும்.

வைகாசி விசாக தினமான மே 30ஆம் தேதி காலையில் காவடி, பால்குடம், ஸ்ரீகாா்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் வெள்ளி கவசம் அலங்காரம் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

திருப்புகழ் அன்பா்களின் திருப்புகழ் இசை மாலையில் நடைபெறும். நிறைவு நாளான மே 31ஆம் தேதி ஆவஹந்தி ஹோமம் நடக்கிறது. இந்நாளில் ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தியும், ஜெயந்தி உற்சவம் மஹா அபிஷேகம், அதைத் தொடா்ந்து வேத பாராயணமும் நடைபெறும்.

மாலையில், வேதிக் பிரசாா் சன்ஸ்தான் விபிஎஸ் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்கத்துடன் இணைந்து ஓம் சரவண பவ என்ற சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.

சாய் சுந்தா் பத்மநாபன் முருகப் பெருமானைப் போற்றி பக்திப் பாடல்களைப் பாடுகிறாா். அன்று மாலை ஸ்ரீ சுப்ரமணியா் லட்சாா்ச்சனையுடன் மூன்று நாள் திருவிழா நிறைவடையும். அனைத்து நாள்களிலும் மகா

தீபாராதனைக்குப் பின் பக்தா்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்படும் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.