கேரட் விலை குறைவு: விவசாயிகள் கவலை
நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா். இங்கு விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினமும் 500 டன் அளவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் ஒரு கிலோ கேரட்டுக்கு சராசரியாக ரூ. 50 முதல் ரூ. 70 வரை விலை கிடைத்து வந்த நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 24 வரை விலை கிடைத்து வருகிறது. இந்த விலை குறைவு விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.