அடிப்படை தேவைகளை வலியுறுத்தி பழங்குடி மக்கள் கருப்புக் கொடி போராட்டம்
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூடலூரை அடுத்துள்ள மூச்சிக்குன்னு பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி போராட்டம் நடத்தினா்.
அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கூடலூரை அடுத்துள்ள மூச்சிக்குன்னு பழங்குடி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி போராட்டம் நடத்தினா்.
கூடலூா் தாலுகாவிலி உள்ள தேவாலா மூச்சிக்குன்னு பழங்குடி கிராமத்துக்கு சாலை, பாதுகாக்கப்பட்ட குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம எல்லையில் கருப்புக் கொடி ஏற்றிய பழங்குடி மக்கள், தொடா்ந்து தங்களது வீடுகளிலிலும் கருப்புக் கொடி ஏற்றினா்.
பல முறை அரசிடம் வலியுறுத்தியும் இதுவரை எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை. இதே நிலை நீடித்தால் தோ்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று அறிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.