முகப்பு
நூல் அரங்கம்

சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)

குழந்தைகளிடம் திரையைத் திறந்து, அதன் வழியே அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தைத் தழுவிக்கொள்ள அழைப்பு விடுக்கிறார் இயக்குநரான நூலாசிரியர்.

Updated On : 29 ஜூன் 2026, 7:53 pm IST
பகிர்:

சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)-சீனு ராமசாமி, பக். 140; ரூ. 180; சந்தியா பதிப்பகம், சென்னை-600 083, ✆ 044- 2489 6979.

ஒரு ரசனை மிகுந்த மனிதன் இந்த சமூகத்துக்குத் தீங்கிழைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாக நம்புகிறார் இந்த நூலின் ஆசிரியரான இயக்குநர் சீனு ராமசாமி. படிப்பதிலிருந்து பார்க்கும் முறைக்கு வந்துவிட்ட குழந்தைகளின் ரசனை வாயிலாக இந்த உலகத்தை அன்பு நிறைந்த உலகமாக வடிவமைக்க இந்த நூலின் வாயிலாக தனது கோரிக்கையை உரக்கச் சொல்லி இருக்கிறார் அவர்.

இன்றைய குழந்தைகளின் சிந்திக்கும் கோணத்தில் ஏற்படுத்தும் நல்ல மாற்றத்தின் மூலம், வருங்காலத்தில் இந்தச் சமூகமும் உலகமும் எதிர்கொள்ளப்போகும் பிரச்னைக்கு சுமுகமான தீர்வை எளிதாக எட்டலாம் என்கிறார் அவர். அதற்காக அவர் கையில் எடுத்திருக்கும் நுட்பமான கருவி சினிமா.

Advertisement

Advertisement

சினிமாவை நட்சத்திரங்களைக் கொண்டாடும் திருவிழாவாகச் சுருக்கி விடாமல், எதிர்காலச் சந்ததியினரின் மனசெல்லாம் அன்பு, இரக்கம், ஈகை, விட்டுக்கொடுத்தல் உள்ளிட்ட அற நூல்கள் சொல்லும் நற்பண்புகளை விதைக்கும் பொறுப்புள்ள ஊடகமாக நோக்கச் சொல்கிறார் நூலாசிரியர்.

சினிமா ரசனைக் கல்வியைப் பாடத்திட்டமாக்கி பள்ளிக் கல்வியில் நல்ல பல திரைப்படங்களைக் காட்சிப்படுத்தி அந்தக் காட்சியை எந்த கோணத்தில், எந்த உணர்வின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என சொல்லிக்கொடுத்து, அதன் வழியே குழந்தைகளின் மனங்களில் அறம் சார்ந்த கருத்துகளை விதைத்து ஒட்டுமொத்த மனித இனத்தையே புனித இனமாக மாற்றலாம் என பரிந்துரைக்கிறார் நூலாசிரியர்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தையும் வகுத்திருக்கிறார் நூலாசிரியர். குழந்தைகளிடம் திரையைத் திறந்து, அதன் வழியே அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தைத் தழுவிக்கொள்ள அழைப்பு விடுக்கிறார் இயக்குநரான நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments