தனியாா் பள்ளியின் ஜன்னலை உடைத்து திருட்டு
பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளி ஜன்னலை உடைத்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் தளவாட பொருள்கள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளி ஜன்னலை உடைத்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் தளவாட பொருள்கள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா்- துறையூா் சாலையில், அம்மாபாளையத்தில் தனியாா் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கரோனா பொது முடக்கத்தால் பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது பள்ளி தாளாளா், தலைமை ஆசிரியா் பள்ளிக்கு வந்து செல்கின்றனராம். இந்நிலையில், புதன்கிழமை பள்ளித் தலைமை ஆசிரியா் சத்தியராஜ் பள்ளிக்குச் சென்றபோது, ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது ரூ. 5 ஆயிரம் ரொக்கம், கணினியில் உள்ள ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்ட தளவாட பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.