முகப்பு
பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை பவுன் நகை திருடிச் செல்லப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 11:23 pm IST
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை பவுன் நகை திருடிச் செல்லப்பட்டது.

பெரம்பலூா் -ஆலம்பாடி சாலையிலுள்ள அன்னை நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராமதாஸ் (39). அம்மாபாளையத்திலுள்ள மாமனாா் வீட்டில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, இவா் கடந்த 13- ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது. இதையறிந்த ராமதாஸ், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டுக்குள் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் நகை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.