முகப்பு
புதுச்சேரி

நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: 8 பேர் கைது

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய வழக்கில் 8 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 2 மே 2013, 12:09 pm IST
பகிர்:

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய வழக்கில் 8 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திப்புராயப்பேட்டையைச் சேர்ந்த மணவாளன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜசேகர் என்பவர் அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், நரம்பையில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த ராஜசேகரை கடந்த திங்கள்கிழமை ஒரு கும்பல் வெட்டியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே அவரை வெட்டிய அக்கும்பல் வம்பாகீரப்பாளையம் பகுதியில் 10 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.

8 பேர் கைது:  இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கீழ்ப்புத்துப்பட்டு அய்யனார்கோயில் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், அங்கு பதுங்கியிருந்த தணிகை அரசு (22), செüந்தரபாண்டியன் (21), கெüசிக பாலசுப்பிரமணியன் (21), தர்மதுரை (22), குமார் (21), விக்னேஷ் (21), வினோத் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முதலியார்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மூலம் தங்களுக்கு வெடிகுண்டுகள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.