முகப்பு
புதுச்சேரி

15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

புதுச்சேரியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல்

Updated On : 2 மே 2013, 12:07 pm IST
பகிர்:

புதுச்சேரியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேட்டுப்பாளையம் கனரக வாகன நிறுத்தமிடத்தில், கடத்தப்பட்ட ரேசன் அரிசியோடு லாரி நிற்பதாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை அங்கு விரைந்த போலீஸார், லாரியைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். இதில், தலா 50 கிலோ கொண்ட 305 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

லாரியில் இருந்த ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர்.  இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி உரிமையாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் பாப்ஸ்கோ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.