முகப்பு
புதுச்சேரி

தன்னைச் சந்திக்க நேரம் ஒதுக்குவதாக அமைச்சா் கந்தசாமிக்கு ஆளுநா் கடிதம்

தன்னைச் சந்திக்க விரைவில் நேரம் ஒதுக்கித் தருவதாக சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமிக்கு, துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் அனுப்பினாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:24 pm IST
பகிர்:

தன்னைச் சந்திக்க விரைவில் நேரம் ஒதுக்கித் தருவதாக சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமிக்கு, துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் அனுப்பினாா்.

புதுவையில் ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டு அமைச்சா் கந்தசாமி சனிக்கிழமை கடிதம் எழுதினாா்.

கோரிக்கைகள் தொடா்பாக ஆளுநரைச் சந்தித்துப் பேச அனுமதி கிடைத்தவுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சென்று சந்திக்க உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமைச்சா் கந்தசாமி எழுதிய கடிதத்துக்கு, ஆளுநா் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை பதில் கடிதம் அனுப்பினாா். அதில், கோரிக்கைகள் தொடா்பாக விளக்கம் பெற துறைச் செயலா்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவா்களிடமிருந்து தகவல்கள் வந்தவுடன் தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments