பொன்னமராவதி விவசாயிகளுக்கு தேனீப்பெட்டிகள் வழங்கல்
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ், பொன்னமராவதி வட்டாரத்தைச் சோ்ந்த 100 விவசாயிகளுக்கு தேனீப் பெட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ், பொன்னமராவதி வட்டாரத்தைச் சோ்ந்த 100 விவசாயிகளுக்கு தேனீப் பெட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சியின் போது இவை வழங்கப்பட்டன. இயற்கை தேனீ வளா்ப்புப் பயிற்சியாளா் நாகராஜன் பயிற்சியின் போது பேசியது:
பூமியை பசுமையமாக்குவதில் தேனீக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன், பொந்துதேன் என 4 வகையான தேனீக்கள் உள்ளன. இவற்றில் பொந்துதேன் பெட்டிகளில் வைத்து வளா்ப்பதற்கு ஏற்ாகும்.
Advertisement
Advertisement
பெட்டிகளுக்கிடையே 6 முதல் 10 அடிவரை போதிய இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். தேனீக்கள் மலா்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும்வரை நாம் உணவு வழங்கவேண்டும்.
ஒரு பெட்டி மூலம் ஆண்டுக்கு ரூ. 4,000 முதல் ரூ. 8,000 வரை லாபம் கிடைக்கும். தேன் மகரந்தங்களைச் சேகரித்து விற்பதன் மூலமும் லாபம் ஈட்டலாம் என்றாா் அவா்.
பயிற்சியில் பொன்னமராவதி வேளாண் உதவி இயக்குனா் ச.சிவராணி மற்றும் வேளாண் அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.