29.6.1976: த. நா. அரசு கார்கள் பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடு: ஜூலை 1-ந்தேதி முதல் அமல்
த. நா. அரசு கார்கள் பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது பற்றி...
சென்னை, ஜூன். 28 - தமிழ்நாடு அரசு இலாகாக்களில் ஜூலை 1-ந் தேதி முதல் பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடு அமலுக்கு வரும்.
அரசு இலாகாக்களின் கார்கள், வாகனங்களின் பெட்ரோல் செலவைக் குறைக்க பிரதம காரியதரிசி கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி கூறிய சிபாரிசின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் செலவு உச்ச வரம்பில் சில இலாகாவின் வேலைகளின் தன்மையை கவனத்தில் கொள்ளப்படும். எதிர்பாராத நிலைமைகளைச் சமாளிக்க ரிசர்வ் கோட்டாவிலிருந்து இலாகா தலைமை அதிகாரிகள் மற்ற அதிகாரிகளுக்கு பெட்ரோல் ஒதுக்கீடு செய்யலாம்.
Advertisement
Advertisement
பெட்ரோல் உபயோகக் கட்டுப்பாடினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 75 லட்சம் மீதமாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
மீண்டும் இந்தியா - பாக் ரயில் சர்வீஸ்
புதுடில்லி ஜூன் 28 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே ஜூலை 17-க்கும் 24-க்கு மிடையே ரயில் போக்குரத்தை மீண்டும் துவக்கும் உடன்பாடு ஒன்றில் இரு நாட்டு தூதுகோஷ்டி தலைவர்களும் இன்று இங்கு கையெழுத்திட்டனர்.
ரயில் போக்குவரத்து ஆரம்பமாகும் தேதியை இரு நாட்டு நிபுணர்களும் பரஸ்பரம் கலந்து ஆலோசித்து நிர்ணயிப்பர்.
செயல்படும் ஏற்பாடுகள் சம்பந்தமாக இந்த உடன்பாட்டில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கோஷ்டி தலைவர் ஆர். சீனிவாசன் கூறினார்.
உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு சீனிவாசன் பதில் அளிக்கையில் 1965ல் (சண்டை துவங்கியதை யொட்டி) ரயில் தொடர்பு துண்டிக்கப்படும் முன்பு பாகிஸ்தானில் வீட்டு செல்லப்பட்ட ரயில் வாகனங்கள், பெட்டிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு திரும்பத் தரும் பிரச்னை விவாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். நுணுக்கமான பிரச்னைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன என்றார். ...
29.6.1976: Restriction on petrol consumption for Tamil Nadu government cars: Effective from July 1st.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.