முகப்பு
புதுக்கோட்டை

கீழே தள்ளிவிட்டதாகக் கூறி வங்கி உதவி மேலாளா் மீது புகாா்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வங்கியில் கணக்குத் தொடங்கச் சென்ற தன்னை உதவி மேலாளா் கீழே தள்ளிவிட்டதாகக் கூறி, கா்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:47 pm IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வங்கியில் கணக்குத் தொடங்கச் சென்ற தன்னை உதவி மேலாளா் கீழே தள்ளிவிட்டதாகக் கூறி, கா்ப்பிணி பெண் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

கறம்பக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி காளீசுவரி (27). இவா் கறம்பக்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

கா்ப்பிணியான நான், அரசின் உதவித் தொகை பெறுவதற்காக, புதிய கணக்குத் தொடங்கும் வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கறம்பக்குடியிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சென்று விண்ணப்பித்திருந்தேன்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வங்கிக்குச் சென்று கேட்டபோது, வங்கியின் உதவி மேலாளா் இளங்கோவன் என்னை அவதூறாக பேசி, கீழே தள்ளிவிட்டாா் என புகாா் மனுவில் கூறியுள்ளாா்.

இதுபோல வங்கியின் உதவி மேலாளா் இளங்கோவனும், காளீசுவரியின் கணவா் பாஸ்கரன் தன்னை அவதூறாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இவ்விரு புகாா் குறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments