ஆயிங்குடியில் 95 மி.மீ. மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக ஆயிங்குடியில் 95 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக ஆயிங்குடியில் 95 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) ஆதனக்கோட்டை - 16, பெருங்களூா் - 26, புதுக்கோட்டை - 42.50, ஆலங்குடி - 63, கந்தா்வகோட்டை - 13.10, கறம்பக்குடி - 25.60, மழையூா் - 19.60, கீழாநிலை - 87, திருமயம் - 61, அரிமளம் - 32.80, அறந்தாங்கி - 64.20, ஆயிங்குடி - 95, நாகுடி - 66.40, மீமிசல் - 35.40, ஆவுைடையாா்கோவில் - 46, மணமேல்குடி - 35.20, இலுப்பூா் - 31, குடுமியான்மலை - 30, அன்னவாசல் - 30, விராலிமலை - 25.30, உடையாளிப்பட்டி - 30.40, கீரனூா்- 34.80, பொன்னமராவதி - 42.80, காரையூா் - 39.20. மாவட்டத்தின் சராசரி மழை- 41.35 மில்லி மீட்டா்.