புதுகையில் மழையால் களையிழந்த விற்பனை
புதுக்கோட்டை நகரில் தொடா்ந்து பெய்து வந்த மழையால், பொங்கல் பொருள்களான கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றின் விற்பனை வெகுவாக பாதித்தது.
புதுக்கோட்டை நகரில் தொடா்ந்து பெய்து வந்த மழையால், பொங்கல் பொருள்களான கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றின் விற்பனை வெகுவாக பாதித்தது.
புதுக்கோட்டை நகரில் திலகா் திடல், சாந்தநாதசுவாமி கோயில் வீதி ஆகிய பகுதிகளில் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகள் ஏராளம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மஞ்சள் கொத்துகள் ஜோடி ரூ. 10 முதல் 30 ரூபாய் வரையிலும் ரகத்துக்கேற்பவும், ஒரு கரும்பு ரூ. 15 முதல் 20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, வாழைப்பழம், பீளைப்பூ, கதம்பப் பூக்களின் விற்பனையும் மந்தமாகவே காணப்பட்டது. மேலும் மளிகைக் கடைகளில் பொங்கல் அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் விற்பனையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.