முகப்பு
ராமநாதபுரம்

பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த புதுமணத் தம்பதி

கமுதி அருகே பாதுகாப்பு கோரி, காவல் நிலையத்தில், புதுமணத் தம்பதி, புதன்கிழமை தஞ்சம் புகுந்தனர்.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:42 am IST
பகிர்:

கமுதி அருகே பாதுகாப்பு கோரி, காவல் நிலையத்தில், புதுமணத் தம்பதி, புதன்கிழமை தஞ்சம் புகுந்தனர்.

  அபிராமம் காவல் நிலைய சரகம் முத்து விஜயபுரத்தைச் சேர்ந்தவர் உடையார் மகன் பன்னீர் செல்வம் (33).

  இவருக்கும் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய சரகம் சுவாத்தானைச் சேர்ந்த சேதுராஜா மகள் லட்சுமி பிரியா (23)வுக்கும் கடந்த மாதம் திருமணம் குறித்து பேசப்பட்டதாம்.

Advertisement

Advertisement

  இதையொட்டி லட்சுமி பிரியாவை பெண் பார்க்க பன்னீர் செல்வம் வந்திருந்தபோது இருவரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். இதன் பின்பு இருவரும் செல் போனில்  பேசிவந்ததாகவும் கூறப்படுகிறது.

   இதற்கிடையே பன்னீர் செல்வத்துக்கு பெண் தர விருப்பம் இல்லை என்று கூறி லட்சுமி பிரியாவுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பன்னீர் செல்வத்தை விரும்பிய லட்சுமி பிரியா

வீட்டைவிட்டு வெளியேறி, பன்னீர் செல்வம் வீட்டுக்கு வந்து விட்டாராம்.

  புதன்கிழமை அபிராமம் கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

  இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புதுமணத் தம்பதி இருவரும், அபிராமம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்கள். இதுகுறித்து சார்பு ஆய்வாளர் லட்சுமி விசாரணை நடத்தினார்.

      பெண் வீட்டாரை அழைத்துப் பேசி சுமூகமான முடிவு எடுப்பதாக உறுதி அளித்து, லட்சுமி பிரியாவை, பன்னீர்செல்வத்துடன் அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments