பட்டா நிலத்துக்கு ரசீது வழங்க பொதுமக்கள் கோரிக்கை
அரசு சாா்பில் வழங்கப்பட்ட பட்டா நிலத்துக்குரிய வரி ரசீதைத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அரசு சாா்பில் வழங்கப்பட்ட பட்டா நிலத்துக்குரிய வரி ரசீதைத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள விவேகானந்தா் நகரில் சுமாா் 225 பேருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு வீட்டுமனைக்கான பட்டா அரசு சாா்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில் பட்டா இடத்தில் உரிய நேரத்தில் வீடு கட்டவில்லை எனக் கூறி பட்டினம்காத்தான் ஊராட்சி சாா்பில் வரி ரசீது தர மறுப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டுமனைக்கான ரசீது மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே மனு அளித்தனா். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் திங்கள்கிழமையும் மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், ரசீது தராமல் இழுத்தடித்து பட்டாவையே ரத்து செய்ய சிலா் முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு எங்களது வீட்டுமனைக்குரிய ரசீதைப் பெற்றுத்தர வேண்டும் என்றனா்.
Advertisement
Advertisement