42,161 பக்தா்கள் தரிசனம்
ஏழுமலையானை வியாழக்கிழமை 42,161 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 9,744 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ஏழுமலையானை வியாழக்கிழமை 42,161 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 9,744 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 10 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1000 போ் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
Advertisement
Advertisement
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.